யாழில் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து நடைபெற இருந்த பேரணி பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் கைவிடப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினால் இன்று காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட இருந்த பேரணிக்கு பொலிஸார் அனுமதி மறுத்ததால் அப்பேரணி கைவிடப்பட்டது.
அண்மைக்காலமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் ஆலயங்களில் உள்ள பெறுமதி மிக்க பொருட்கள் சூறையாடப்பட்டமை என்பவற்றை கண்டித்தே இப் பேரணி நடைபெற இருந்தது.
பேரணியை கைவிட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் யாழ். அரச அதிபர் ஊடாக ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்க யாழ் செயலகத்திற்கு சென்றிருந்தனர். அங்கு அரச அதிபரோ மேலதிக உதவி அரசாங்க அதிபரோ இல்லாத காரணத்தால் அங்கிருந்த பதவி நிலை அதிகாரி ஒருவரிடம் மகஜரை கையளித்து சென்றுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
இந்து ஆலயங்களின் மீதான தாக்குதலை கண்டித்து யாழ். நகரில் பேரணி