இலங்கையில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆறு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதங்களை நேற்று (09) கையளித்தனர்.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று காலை இடம்பெற்றது.
எஸ்டோனியா குடியரசின் தூதுவர் வில்ஜார் லுபி, கொலம்பியா குடியரசின் தூதுவர் மொனிக்கா லன்செட்டா முடிஸ், இஸ்ரேலுக்கான தூதுவர் டேனியல் கர்மொன், பல்கேரியா குடியரசுக்கான தூதுவர் பெட்கோ கொலேவ் டொய்கோ, வியட்நாம் குடியரசுக்கான தூதுவர் பான் கியூ தா, லாவோஸ் மக்கள் குடியரசுக்கான தூதுவர் சௌத்தம் சகோனின்ஹோம் ஆகியோரே தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆறு தூதுவர்களும் ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியல் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதயின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்