தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் : 5 பெரும் நட்சத்திரங்களை இணைக்கிறார் பாலா

பாலிவுட்டில் மல்டி ஸ்டாரர் எனும் பல பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படங்கள் சர்வசாதாரணமாக வருவது வழக்கம். எண்பதுகளில் அமிதாப், ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடித்தார்கள் (இந்தி). ஆனால் தமிழில் அது மிக அரிதாகத்தான் இரு பெரும் ஹீரோக்கள் இணைந்து நடிப்பார்கள். முன்பு கார்த்திக் – அஜீத் அப்படி சில படங்கள் நடித்தனர். இப்போது ஆர்யா சில ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கிறார்.

bala

ஆனால் முதல் முறையாக 5 பெரும் நட்சத்திரங்களை நாயகர்களை வைத்து ஒரு படம் உருவாகிறது. உருவாக்குபவர் பாலா. பிதாமகனில் விக்ரமையும் சூர்யாவையும் இணைத்தவர், அவன் இவனில் ஆர்யாவையும் விஷாலையும் நடிக்கவைத்தவர், இப்போது ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, அதர்வா, ராணா ஆகியோரை இந்தப் புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மல்டி ஸ்டாரர் படம் உருவாவது இதுவே முதல் முறை. இந்தப் படத்தின் பட்ஜெட் வழக்கமான பாலா படங்களின் பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகமாம். வரும் ஜனவரியில் தொடங்கும் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஹீரோயின்கள் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

Related Posts