தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவை மீறியே இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதென குறிப்பிட்டுள்ள பொலிஸ்மா அதிபர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைஎடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
நாட்டில் சகல பகுதிகளிலும் ஒரே சட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு இருக்கையில், வடக்கிற்கும் கிழக்கிற்கும் சிறப்பு சலுகைகள் எவையும் கிடையாதென பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.