ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் ஓய்வு!

ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

messi-2

ஆர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர். 13 வயதிலிருந்தே ஆர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் விளையாடி வருகிறார். மெஸ்ஸி இதுவரை 6 லா லிகா பட்டங்கள், 3 சம்பியன் லீக் பட்டங்கள், 2 உலகக்கிண்ண கிளப் ஆட்டங்களில் அணியுடன் வெற்றி என பல பெருமைகளை சேர்த்தவர். பல்வேறு விருதுகள், சாதனைகள் என கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய நட்சத்திர வீரர் மெஸ்ஸி, கால்பந்து உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

அமெரிக்காவின் கோபா (Copa) கிண்ண இறுதிப்போட்டியில் சிலி நாட்டுடன் ஏற்பட்ட தோல்வியை அடுத்தே, அவர் இவ்வறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பெனால்டி கோனர் முறையில், ஸ்பொட் கிக் வாய்ப்பொன்றை மெஸ்ஸி தவறவிட்டிருந்தார். இதனால் ஆர்ஜென்டினா கோல் பெறும் வாய்ப்பை இழந்ததோடு, போட்டி 0 – 0 என முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பெனால்டி கிக் (Penalty Kick) முறை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதன்போது சிலி 4 – 2 என கோல் போட்டு கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

குறித்த போட்டி குறித்து மெஸ்ஸி தெரிவிக்கையில், “என்னைப் பொறுத்தவரையில், தேசிய அணியில் விளையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், கிண்ணத்தை வெல்ல முடியாமல்போனது மனவருத்தமளிக்கின்றது” என்றார்.

Related Posts