ஆரோக்கிய மாதா தேவாலய மணி திருட்டு

பலாலி ஆரோக்கிய மாதா தேவாலய மணி நேற்று வியாழக்கிழமை திருட்டுப் போயுள்ளது.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மேற்படி ஆலயத்தின் பெருவிழாவுக்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

கடந்த 26 வருடங்களின் பின்னர் மேற்படி ஆலயத்துக்கு பொதுமக்கள் மதவழிபாடுகளை மேற்கொள்ள படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் 2010 ஆம் ஆண்டு ஆலயத்தினை பார்வையிடுவதற்கும், பூஜை வழிபாடு ஒன்றினை மேற்கொள்ள வந்திருந்தபோது ஆலயத்தின் பெரிய மணி இருந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை (08) மீண்டும் வந்து பார்த்தபோது ஆலயத்தின் மணி களவாடப்பட்டுள்ளதாக பங்குத்தந்தை தெரிவித்தார்.

Related Posts