ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!!

மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பினை காட்டி போராட வேண்டும் என்றும் முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டார்.

ஆரியகுளத்தை புனரமைக்கும் போது அருகிலிருந்த விகாராதிபதியுடன் சேர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போராடிக்கொண்டிருந்ததை மக்கள் அறிவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

Related Posts