ஆரம்பமாகியது வடக்கின் மாபெரும் துடுப்பாட்ட போர்

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 106 ஆவது 03 நாள் கிரிக்கெட் போட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் 08.03.2012 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரர்களை கைகுலுக்கி உற்சாகப்படுத்தி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.முதலாவது இன்னிங்ஸில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மத்திய கல்லூரி அணி முதலில் துடுபெடுத்தடத் தீர்மானித்து பரியோவான கல்லூரி அணியை களத்தடுப்பில் ஈடுபட அழைத்தது.

இதில் யாழ்.மத்திய கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது தற்போது பரியோவான் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.இந்தப் போட்டியில் மத்திய கல்லூரி அணியின் தலைவராக தங்கராஜா கோகுலனும் புனித பரியோவான் கல்லூரி அணியின் தலைவராக ஜேசுதாசன் அட்ரியனும் செயற்படுகின்றனர்.இதுவரை நடைபெற்ற போட்டிகளின் பிரகாரம் புனித பரியோவான் கல்லூரி அணி 33 போட்டிகளிலும் யாழ் மத்திய கல்லூரி அணி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், 35 போட்டிகள் கடும் போராட்டத்தின் மத்தியில் சமநிலையில் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts