கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளின் கீழ் மாபெரும் நடைபவனி சற்றுமுன் கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
முன்னர் திட்டமிட்டபடி, கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த நடைபவனி ஆரம்பமாகவிருந்த போதிலும் அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இன்று கண்டியில் ஆரம்பமாகும் இந்த நடைபவனி மாவனல்லை வரையிலும் இடம்பெறவுள்ளது.
நாளை ( 29) மீண்டும் மாவனல்லையிலிருந்து நெலுந்தெனிய வரை செல்லவுள்ளது.
மூன்றாவது நாளில் (30) நெலுந்தெனியவிலிருந்து நிட்டம்புவ வரையிலும், நான்காவது நாளான 31 ஆம் திகதி நிட்டம்புவயிலிருந்து கிரிபத்கொட நகர் வரையிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாவது நாளில் (01) கிரிபத்கொட நகரிலிருந்து கொழும்பு வரை நடைபவனி செல்லவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.