யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் வியாழக்கிழமை 4 மணிநேர சுகயீன லீவு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சுகயீன லீவு போராட்டத்தில்;, ஆய்வுகூடத்தில் தகுதியற்றவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம்.வைத்தியசாலைக்கு வெளியில் தகுதியற்றவர்கள் ஆய்வுகூடங்களை நிறுவுவதனையும், அங்கு தகுதியற்றவர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தல் வேண்டும் என்றும் கோரிநின்றனர்.
அத்துடன், வைத்தியசாலைகளில் தகுதியானவர்களை வேலைக்கு அமர்த்தல் வேண்டும், பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கு உடன் ஆய்வுகூடத்தில் வேலை வழங்கல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதில் குருதி பரிசோதனை மற்றும் இரசாயன பரிசோதனைக் கூடங்கள் போன்ற அவசர பிரிவில் தலா இருவர் வீதம் பணிக்கு அமர்த்திருந்ததுடன் ஏனைய ஆய்வுகூட தொழில் நுட்ப வியலாளர்களே சுகயீன லீவு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.