ஆயுதப் போராட்டம் காத்திருக்கிறது! : பாராளுமன்றத்தில் இரா.சம்மந்தன்

ஆயுதப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிப்பது பாரிய பிரச்சனையாக உள்ளதென இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இத்தகைய இனவாதச் செயற்பாடுகள் விரைவில் நீக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டை காக்கின்றோம் எனக் கூறி சிலர் மேற்கொள்ளும் இனவாதச் செயற்பாடுகள், இறுதியில் துன்பத்திலேயே முடிவடையுமென இலங்கை நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய சிறப்புரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பிளவுபடாத நாட்டில் ஒன்றித்து செயற்படுவதற்கே தாம் விரும்புவதாக தெரிவித்த சம்பந்தன், இந்த விடயத்தில் சகலரும் ஐக்கியத்துடன் செயற்படுவது முக்கியமானதென மேலும் தெரிவித்தார்.

Related Posts