ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் மீட்பு

காலி துறைமுகத்தில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தக் கப்பலில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்கள் 12 இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை, எவான்ட் காட் மரிடைம் (Avant Garde Maritime Services) என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது எனவும், குறித்த ஆயுதங்கள் கடலில் பயணிக்கும் போது கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க அவசரத் தேவைகளின் போது வழங்க பயன்படுத்தப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

Related Posts