ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை ஒரே வாரத்தில் இழந்த ரஷ்யா!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் 6,700 இராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை உக்ரைன் ஆயுதப்படையின் ஜெனரல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா கடந்த 7 நாட்களில் மட்டும் 6,700 இராணுவ வீரர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 930 இராணுவ வீரர்களை இழந்து இருப்பதாகவும், இந்த வாரத்தில் உள்ள 3 நாட்களில் ரஷ்யா 1000க்கும் அதிகமான வீரர்களை இழந்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனுடன் ரஷ்யா 88 டாங்கிகளையும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,720 டாங்கிகளையும் ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபரில் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலில், 1,90, 000 வீரர்களை ரஷ்ய இராணுவம் இழந்து இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து டிசம்பர் 12ம் திகதி அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா 3,60,000 வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts