ஆப்கானிஸ்தானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி!

தார்ஜாப் மாவட்டத்தில் வெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாக உள்ளது. அங்கு 27 குழந்தைகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு பக்கம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றால் இன்னொரு பக்கம் இயற்கையும் கடும் பனிப்பொழிவின் வாயிலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக அங்குள்ள ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. உயிரை உறைய வைக்கிற குளிரால் வயதானவர்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில், தார்ஜாப் மாவட்டத்தில் வெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாக உள்ளது. அங்கு 27 குழந்தைகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளன.

கிராமங்களில் இருந்து சுகாதார மையங்களுக்கு செல்கிற சாலைகளில் பனிக்கட்டிகளால் போக்குவரத்து முடங்கிப்போய் உள்ளது. 50 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு உள்ளதால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.

இன்னொருபக்கம் இந்தப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஆதிக்கமும் தொடர்வது, மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சம் தருகிற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. அவசரத்துக்கு மருத்துவ சிகிச்சை பெற சுகாதார மையங்களுக்கு கூட செல்ல முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Related Posts