ஆப்கானில் திடீர் காட்டாற்று வெள்ளம் – 74 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் நான்கு கிராமங்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாகவும், இதுவரை 74 பேர் பலியாகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

abkanistan-vellam

இந்த திடீர் வெள்ளத்தால் பாக்லான் மாகாணத்தில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிட்டதாகவும், மக்களின் உடைமைகள், கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் வெள்ளத்தால் இதுவரை 74 பேர் உயிரிழிந்திருப்பதகாவும், 200 பேரை காணவில்லை எனவும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் அம்மாகாண காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Posts