17 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள்

cash-money-paymentநல்லூர் பிரதேச சபையினால் 17 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே இந்த வேலைத்திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதனால், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் அபிவிருத்தி பணிக்காக 2 மில்லியன் ரூபாவும் விளையாட்டு கழகங்களுக்கு 1 மில்லியனும், திருநெல்வேலி பொதுச்சந்தை அழகுபடுத்துவதற்கு 7 மில்லியனும், ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்திக்கு நான்கு மில்லியனும் ஏனைய வேலைத்திட்டங்களுக்காக 3 மில்லியனும் பிரதேச சபை நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வேலைத்திட்டங்களை ஒக்டோபர் மாதத்திற்குள் பூரணப்படுத்தப்படவுள்ளமையினால், அடுத்த வாரத்தில் இருந்து பணிகள் ஆரம்பபிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts