ஆபாச பாடல் விவகாரம்: சிம்புவின் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல்கள் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் போலீசாரும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக நடிகர் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின்போது, அவர் மீது பதிவான வழக்குகளில் உள்ள சட்டப்பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியது என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜனவரி 29-ந் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு சிம்பு விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், போலீசார் முன்பு நேரில் ஆஜராக காலஅவகாசம் வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் சிம்பு இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts