ஆன்மீக விழிப்புணர்வுக்கான ஆரம்ப நிகழ்வு

வண்ணை சிவாலயத்தில் இன்று சிவார்ப்பணம் ஆராதனைக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது

IMG_3709 copy

இந்து ஆலயங்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கவும் ஆலயங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களை தவிர்க்கவும் வேண்டி இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவென வண்ணை சிவாலயத்திலிருந்து கீரிமலை சிவாலயத்துக்கு ஊர்வலமாக செல்வதற்கான இந்த ஆரம்ப நிகழ்வை சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழர்களது வாழ்விடங்களை அடையாளப்படுத்தும் சின்னங்களாகவும் இந்து ஆலயங்கள் திகழ்கின்றன. இவற்றின் புனிதத்தன்மை அற்றுப் போகும் போது எமது சமூகத்தின் ஒழுக்க நெறிகள், சமூகக் கட்டமைவுகள், பாரம்பரியங்கள், வரலாற்றுச் சுவடுகளும் அற்றுப்போகும் என்பதால் இது விடயத்தில் இந்துப் பெருமக்கள் தீவிர கவனமெடுத்து செயற்பட வேண்டுமென இதற்கான அழைப்புக் கடிதத்தில் குருமார் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆன்மீக விழிப்புணர்வு ஊர்வலத்துக்கான இந்த ஆரம்ப நிகழ்வில் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயற்பாட்டிலுள்ள இந்துமத நிறுவனங்கள், அறநெறி அமைப்புக்களின் உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts