ஆனையிறவில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான காணியை தேர்வு செய்யும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வட மாகாணத்தில் கிரிக்கெட் சங்கங்களை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வட மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் விளையாட்டு தொகுதியொன்றையும், நீச்சல் தடாகமொன்றையும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேசிய விளையாட்டு போட்டிகளை இம்முறை வடக்கில் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டே இந்த போட்டிகள் நடாத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts