Ad Widget

ஆனைக்கோட்டையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: மானிப்பாய் பொலிஸார்மீது மக்கள் சந்தேகம்!!!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற கும்பலொன்று, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, தாம் கொண்டுவந்த வாள்களால் வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களை சேதப்படுத்தி, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர், 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும், குறித்த வீடு யாழ். பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டதென கூறி முறைப்பாட்டை ஏற்கவில்லை.

இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இதே வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸாரே முன்னெடுத்து வருகின்றனர். எனினும், நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை ஏற்க முடியாதென கூறியுள்ளமையானது, தமக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதென அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Posts