ஆதரவற்ற பிள்ளைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய பரத்!

பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் பரத். இவர் தற்போது என்னோடு விளையாடு, கடுகு, பொட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், என்னோடு விளையாடு, கடுகு படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு பெரும்பாலும் காதல் நாயகனாக நடித்து வந்த பரத், இந்த படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், பொட்டு படத்தில் பேய் கதையிலும், கடுகு படத்தில் கிராமத்து பயில்வானாகவும் நடித்துள்ளார் பரத்.

barath

இந்நிலையில், நேற்றைய தினம் தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடியுள் ளார் பரத். அதையொட்டி, சென்னையிலுள்ள முக்கிய சாலைகளில் பரத் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டி பரத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். மேலும், இந்த பிறந்த நாளை சென்னையில் உள்ள சாலமோன் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று கேக் வெட்டி கொண்டாடிய பரத், அவர்களுக்கு உணவு மற்றும் நோட்டு புத்தகங்களும் வழங்கியுள்ளார்.

Bharath-Birthday-Celebration-Stills-box

Related Posts