ஆண்ட்ராய்டில் ‘கத்தி’ படத்தின் கேம்!

படத்தை வெற்றியடைய வைக்க என்னென்னவோ உத்திகளை எல்லாம் கையாள ஆரம்பித்துவிட்டனர். அவற்றில் ஒன்றுதான்… படம் வெளிவருவதற்கு முன்பு ஆண்டராய்டில் மொபைல் கேம்களை உருவாக்குவது. பாலிவுட்டில் வெளியாகும் பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்களுக்கு மொபைல் கேம் வெளியிடுவது அங்கே வழக்கத்தில் உள்ளது.

safe_image-350x182

கோலிவுட்டில் இப்போதுதான் மொபைல் கேம் உருவாக்குவது மெல்ல தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே கோச்சடையான், சைவம், அஞ்சான் ஆகிய படங்களுக்கு மொபைல் கேம் வெளியிடப்பட்டது.

இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனாலோ என்னவோ, மொபைல் கேம் வெளியிட்டால் படம் ஓடாது என்ற சென்ட்டிமெண்ட் கோலிவுட்டில் தற்சமயம் நிலைபெற்றிருக்கிறது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் கத்தி படத்தின் ஆன்ட்ராய்டு கேம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

3டியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேமில் விஜய்யின் சண்டைக்காட்சிகள் அவரது ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று இந்த விளையாட்டாய் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.skyTou.kaththi3dgame

Related Posts