Ad Widget

ஆண்டின் முதற்தர கிரிக்கெட் வீரராக இலங்கையணி வீரர் மத்யூஸ்!

ஆண்டின் முதற்தர சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கையணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபையினரால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபையினரால் மேற்கொள்ளப்பட்ட பலவிதமான தேர்வுகளின் அடிப்படையில் டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர், சர்வதேச ஒரு நாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர், மற்றும் சகல துறை வீரராக மத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், டெஸ்ட் போட்டி சிறந்த துடுப்பாட்டகாரராக குமார் சங்கக்காரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1503911_814004068630802_4967365829698753436_n

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் உம், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளராக லசித் மலிங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ரங்கன ஹேரத் 10 சுற்றுப்போட்டிகளில் பங்கு பற்றி 60 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இருபதுக்கு இருபது போட்டிகளின் சிறந்த துடுப்பாட்ட வீரராக குசேல பெரேரா மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக லசித் மலிங்க, சகலதுறை ஆட்ட வீரராக திசார பெரேராவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இருபதுக்கு இருபது போட்டிகளில் சிறந்த தலைவராக இருந்து வெற்றி வழிவகுத்ததன் அடிப்படையில் லசித் மலிங்க மேலும் ஒரு விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பெண்களுக்கிடையில் இடம்பெற்ற சர்வதேச போட்டிகளின் அடிப்படையில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சமரி அத்தபத்துவும், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகல துறை ஆட்ட வீரராக சசிகலா சிறிவர்த்தன, தெரிவு செய்யப்பட்டனர்.இடம்பெற்ற பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜெகன் முபாரக், பந்து வீச்சாளர் லக்ஷன் ரங்கிக, சகலதுறை ஆட்டக்காரர் ஜீவன் மென்டிஸ், தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுடன் பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக நிரோஷன் டிக்வெல, பந்து வீச்சாளராக நிலங்க பிரேமரத்ன, சகலதுறை ஆட்டக்காரராக சசித் பதிரன தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.23 வயதிற்குட்பட்ட வீரர்கள் தரவரிசைப்படுத்தலில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ருமேஷ் புத்திக, பந்து வீச்சாளர் டிலங்க ஒவேர்ட், சகலதுறை ஆட்ட வீரராக கே.பி.கஜசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts