ஆண்டின் சிறந்த வீரர் அன்ஜலோ மெத்தியுஸ்: மக்கள் தெரிவு திலகரத்ன டில்ஸான்

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏட்ஜ்இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் கலந்து கொண்டார்.

award-cricket

இவ்விழாவில் வருடத்தின் சிறந்த வீரராக இம்முறையும் அன்ஜலோ மெத்தியூஸ் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை இவர் டெஸ்ட் மற்றும் ஓருநாள் போட்டிகளுக்கான சகலவீரர் விருதையும் தட்டிச் சென்றார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட வீரருக்கான விருது இம்முறை திகலரத்ன டில்ஸானும் சிறந்த வளர்ந்துவரும் கிரிக்கட் வீரருக்கான விருது குசல் மென்டிஸும் வென்றெடுத்தனர்.

விருதுகள் பெற்றவர்களின் பெயர்கள் வருமாறு:

ஆண்டின் சிறந்த வீரர் – அன்ஜலோ மத்தியூஸ்
ஆண்டின் மக்கள் தெரிவு வீரர் – திலகரத்ன டில்ஸான்
ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் – குசல் மென்டிஸ்
ஆண்டின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் – தினேஷ் சந்திமால்
ஆண்டின் டெஸ்ட் பந்துவீச்சாளர் – ரங்கன ஹேரத்
ஆண்டின் டெஸ்ட் சகலதுறை வீரர் – அன்ஜலோ மெத்தியூஸ்
ஆண்டின் ஓருநாள் துடுப்பாட்ட வீரர் – குமார் சங்கக்கார
ஆண்டின் ஓருநாள் பந்துவீச்சாளர் – லசித் மாலிங்க
ஆண்டின் ஓருநாள் சகலதுறை வீரர் – அன்ஜலோ மெத்தியூஸ்
ஆண்டின் டி20 துடுப்பாட்ட வீரர் – திலகரத்ன டில்ஸான்
ஆண்டின் டி20 பந்துவீச்சாளர் – லசித் மாலிங்க

Related Posts