ஆணைக்குழுவின் கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது.

வேதன உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 18ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, பணிக்கு செல்லுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தப் போதிலும், கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தாம் தயாரெனவும், இதற்கு முன்னரும் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் இருப்பினும் எந்ததொரு பயனும் கிட்டவில்லையென, பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணைத் தலைவர் டபிள்யு மல்வத்தகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பினால் பல்கலைக்கழக கல்வி சார் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts