ஆட்டுக்குட்டிகளால் மாட்டிய திருடன்

aadu-sheepகளவாக பிடிக்கப்பட்ட ஆட்டினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர்களை தெல்லிப்பழைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.களவாடப்பட்ட ஆட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் மறித்தபோது நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டவர்களை வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்து பொலிஸார் மோட்டார் சையிக்கிளில் சுமார் மூன்ற கிலோ மீற்றருக்கு மேல் துரத்தி சென்று குறிப்பிட்ட முச்சக்கர வண்டியையும் அதில் இருந்தவர்களையும் நிறுத்தியுள்ளனர்.

அந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டியில் இருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில் மேலும் ஒருவரை கைது செய்த பொலிஸார் முச்சக்கர வண்டி, ஆடு ஆகியவற்றையும் பொலிஸ் நிலையத்தில் கையளித்தார்.

எனினும் கைது செய்யப்பட்டநபர் தம்மிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும். அதன்காரணத்தினால் தாம் நிறுத்தாது தப்பி ஓடியதாகவும் ஆட்டிற்கு சுகமில்லாததால் மிருக வைத்தியரிடம் ஆட்டைக் கொண்டுவந்தோம் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து குறித்த நபர் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் கீரிமலைப் பகுதியில் உள்ள ஒருவர் தனது ஆடு இது தான் என தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் வந்து உரிமை கோரியுள்ளார்.

ஆட்டை பிடித்து வந்தவர் தனது ஆடு தான் இது என அடம் பிடித்த நிலையில் ஆட்டின் உரிமையாளரிடம் வேறு ஆதாரம் உண்டா என பொலிஸார் கேட்ட போது ஆட்டின் குட்டிகள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்ததுடன் ஆட்டுக்குட்டிகளையும் பொலிஸ் நிலையம் கொண்டுவந்து சேர்ப்பித்தார்.

அதன் போது குட்டிகள் தாயைக் கண்ட சந்தோசத்தில் பாயந்துசென்று தாயின் மடியில் பால் குடித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆட்டுக்களவு சம்பந்தமாக ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கும் படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் மற்றும் ஒரு சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts