திர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அதன்படி, ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணிவரை ஆட்சேபனைகளை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.