நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நிரந்தரமான, சமத்துவம் மிக்க சமாதானம் ஏற்படும் என எதிர்க் கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் யுத்தத்திற்கான காரணம் என்ன? அந்த யுத்தத்தின் உன்மையான குறிக்கோள் என்ன அந்த குறிக்கோளை அடைந்திருக்கின்றோமா?
மாற்றம் ஒன்று வேண்டுமா? அவ்வாறு மாற்றம் வேண்டும் என்றால் அதற்கு என்ன வேண்டும்? இப்படியான கேள்விகளுக்கு இந்த நிகழ்வு பதிலளிக்கவேண்டும்.
இதற்கு ஆரம்பம் முதல் உண்மை நிலையை அறிய வேண்டும். அந்த உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சமாதனம் ஏற்பட வேண்டும் இப்படியான யுத்தங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நியாயமானதும், சமத்துவம் மிக்கதுமான சமாதானம் ஏற்படக்கூடிய தாக இருக்கும்.
இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வை நாட்டுமக்கள் மாத்திரமல்ல சர்வதேச சமூகமும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது அவர்கள் இந்த நிகழ்வு ஏன் நடை பெறுகின்றது கேள்விஎழுப்புகின்றனர். என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.