புதிய அரசானது ஆட்சி மாறிவிட்டது காட்சி மாறி விட்டது என்று வெளிநாடுகளுக்கு காட்டுகின்றது ஆனால் இங்கு காட்சி மாறவில்லை இது தான் உண்மை இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்றைய அமர்வில் தெரிவித்தார்.
உறுப்பினர் ரவிகரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தென் இலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்படவேண்டும் என்ற ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
குறிப்பாக இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக வடக்கு மாகாண சபை என்ன நிலைப்பாட்டில் உள்ளது தொடர்பாக முதலில் பேசி முடிவெடுக்கப்படவேண்டும் ஏறத்தாள 700 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை துடிக்க துடிக்க சுட்டு கொன்று குவித்துள்ளது அவர்கள் எல்லை தாண்டி வந்தார்களா சட்டத்தை மீறினார்களா அப்பால் குறிப்பாக இந்தப்பிரச்சனையை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள்.
ஈழத்தமிழ் மீனவர்களையும் இந்திய தழிழ் மீனவர்களையும் மோத விட்டு எம்மை சதி வலையில் சிக்க வைக்க முனைகிறது இலங்கை அரசு. எனவே நாங்கள் இந்த சதி வலையில் ஒரு போதும் சிக்கி விட கூடாது அதற்காக நாங்கள் எமது கடல் வளத்தையோ வாழ்வாதாரத்தையோ அடகு வைக்க முடியாது.இதனை பேசி தீர்க்க வேண்டும் புதிய அரசின் நாடகத்தை வெளி உலகத்துக்கு காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார் சிவாஜி.
இலங்கையின் பிரதமர் கௌரவ முதலமைச்சரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் மாண்புமிகு முதலமைச்சரைப் பார்த்து பொய்யன் பொய்யன் என்று கூறியிருக்கிறார் பிரதமர் மன்னிப்பு கோராத விடத்து பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் நடாத்த நாங்கள் தயாராக வேண்டி வரும் என சிவாஜி தெரிவித்த போது அவைத்தலைவரினால் சிவாஜியின் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.