Ad Widget

ஆட்சிக்கு வந்தால் யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களனைத்தினையும் மூடி விடுவோம் -விஜயகலா

 ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் யாழ் மாவட்டத்திலுள்ள எல்லா பொலிஸ் நிலையங்களையும் மூடி விடுவோம் என முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினரும், உதவி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் கூறினார்.

பொலிஸ் நிலையங்கள் எல்லாம் மக்களின் காணிகளில் தான் இயங்குகின்றன அனைத்து பொலிஸ் நிலையங்களும் அகற்றப்பட்டு அவர்கள் தமது சொந்த கட்டிடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

kala

வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர்  மாவட்ட செயலகத்தின் முன்பு கூடியிருந்த பத்திரிகையாளர் மத்தியில் பேசுகின்ற போதே பொலிஸ் நிலையங்கள் அனைத்தையும் மூடி விடுவோம் என்று அறிவித்தார். மேலும் இந்த பகுதியில் நடைபெறுகின்ற சகல விதமான சமூக விரோத செயல்களுக்கும் மாணவர்கள் , இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு சிக்கித் தவிப்பதற்கும் இங்குள்ள பொலிஸாரே காரணம் என பொலிஸார் மீது குற்றம் சுமத்தினார்.

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க  180000 வாக்குகள் வித்தியாசத்தில் மாத்திரமே  தோல்வியடைந்தார்.அவர் தோல்விக்கு முழுக் காரணமும்  பிரபாகரனும் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்றும் குற்றம்  சுமத்தினார்.

அன்று தமிழ் மக்களை வாக்களிக்க  தடை செய்யாமல் விட்டிருந்தால்  எமது மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவிற்கே சேர்ந்திருக்கும்.அவரும்  ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருப்பார்.

யார் தடுத்தாலும்,  எந்த சர்வாதிகார சக்தி எதிர்த்தாலும், யாழ் மாவட்டத்தில் எமது கட்சியின் வெற்றியையாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த தேர்தலில் எமது வெற்றி நிச்சயம் என  ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரான விஜயகலா கூறினார்.

Related Posts