ஆடைகளை உலர்த்திய பெண் காற்றாடியில் சிக்கி மரணம்!

ஆடைகளை உலர்த்த உழவு இயந்திரத்திற்கு அருகில் சென்ற பெண் ஒருவர், உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புத்தூர் பகுதியினை சேர்ந்த 58வயதுடைய பெண்னொருவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மழையில் நனைந்திருந்த வெங்காய பிடிகளை உலர்த்துவதற்காக உழவு இயந்திரத்தினை இயக்கி அதனூடாக காற்றாடியினை இணைத்து வெங்காயத்தினை உலரவைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த பெண்மணி ஆடைகளை உலர்துவதற்காக காற்றாடிக்கு அருகில் ஈரமான ஆடைகளை எடுத்து சென்றுள்ளார். அப்போது வேகமாக வீசிய காற்று அருகில் சென்ற குறித்த பெண்மணியை இழுத்துள்ளது.

இதனால், பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். இருப்பினும், அவர் துரதிஷ்டவசமாக இடைநடுவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts