ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவனுக்கு சத்திர சிகிச்சை!

யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியை, மாணவனின் கையில் அடித்துள்ள நிலையிலேயே மாணவனின் விரல் நகம் சிதைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அம்மாணவனின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts