யாழ்.கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பாடசாலைக்குச் சென்று பெண் ஆசிரியையை பார்த்து கிறீம் பூசுவதில்லையா? பூசினால் அழகாக இருப்பீர்கள் என கூறிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியை உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் யாழ்.கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றுக்கு கடமை நிமித்தம் சென்றிருந்த குறித்த ஆசிரிய ஆலோசகர் எந்த அறிவிப்பும் இல்லாமல் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர்களுடன் பேசியுள்ளார். இதனையடுத்து ஆசிரியர்கள் நீங்கள் யார் என வினவியபோதே தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
பின்னர் திடீரென வகுப்பறைக்குள் சென்று அங்கிருந்த பெண் ஆசிரியையிடம் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதுடன், நீங்கள் கிறீம் பூசுவதில்லையா? பூசினால் அழகாக இருப்பீர்கள் என கூறினாராம்.
இது குறித்து ஆசிரியை தொலைபேசி வாயிலாக உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு தொிவித்திருக்கின்றார். இந்த விடயம் தொடர்பாக யாழ்.வலயக் கல்வி பணிப்பாளரை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டபோது,
மேற்படி ஆசிரிய ஆலோசகர் தனக்கு தொிவிக்காமல் பாடசாலைக்குச் சென்றதாகவும், பாடசாலையில் இடம்பெற்ற அந்த சம்பவம் தொடர்பாக தனக்க செவி வழி முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.