ஆசிரியர் அறைந்ததால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts