ஆசிரியர் – அதிபர்களின் அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

Related Posts