வன்னிப் பிரதேசத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு தொலைபேசி அழைப்புகள் செல்கின்றன.
நாங்கள் வடக்கு மாகாணக் கல்வித் திணைக் களத்தில் இருந்து கதைக்கிறோம், தூரஇடங்களில் இருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான ஏற்பாடொன்று உள்ளது. அதற்கான முடிவு திகதி இன்று.சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிளினைப் பெறவிரும்பும் ஆசிரியர்கள் உடனடியாக குறித்த கணக்கு இலக்கத்திற்கு ரூபாய் ஐம்பதாயிரத்தை வைப்பிலிட வேண்டும் எனக் கூறப்படுகிறதாம்.
இதை நம்பிய ஆசிரியர்கள் சிலர் குறித்த வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாயை வைப்புச் செய்ததாகவும் தகவல்.
எனினும் குறித்த தொலைபேசி அழைப்பின் உண்மைத் தன்மையை அறிய நினைத்த அதிபர்கள் சிலர் மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது, அப்படி எதுவும் கிடையாது எனத் தகவல் கிடைத்ததாம். ஏமாற்றுக்காரர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள் பார்த்தீர்களா? எதிலும் விழிப்பாக இருப்பதே தப்பிக் கொள்வதற்கான ஒரே வழி.