ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்: ஜனாதிபதி

ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர், ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு ஒருபோதும் சம்பளத்துக்கு என மட்டுப்பட்டதல்ல என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வடக்கு மத்திய மாகாண ஆளுனர் பி.பீ.திசாநாயக்க, முதலமைச்சர் பேஷல ஜயரத்ன உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்

Related Posts