ஆசிய கிண்ணத் தொடர் நாளை ஆரம்பம்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை முதல் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ளது.

நடப்புச் சம்பியனான இலங்கை அணி முதல் போட்டியில் வரும் வியாழக்கிழமை (25) மிர்பூரில் விளையாடவுள்ளது. தகுதிச் சுற்றில் தேர்வாகும் அணியுடனேயே இலங்கை விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் ஒரு தகுதி சுற்று அணியும் கலந்து கொள்கிறது.

அந்த ஒரு அணியை தேர்வு செய்வதற்காக ஆசிய கிண்ண தகுதி சுற்று போட்டிகள் பங்களாதேஷில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இதில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங், ஓமன் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இலங்கை அணி: லசித் மாலிங்க (அணித்தலைவர்), அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், திலகரத்ன டில்ஷான், நிரோசன் டிக்வெல்ல, ஷிகன் ஜயசூர்ய, மிலின்த சிறிவர்தன, தசுன் சானக, சாமர கப்புகெதர, நுவன் குலசேகர, துஷ்மந்த சமீரா, திசர பெரேரா, சசித்ர சேனநாயக, ரங்கன ஹேரத், ஜெப்ரே வன்டர்சே.

Related Posts