ஆங்கில செறிவூட்டல் பயிற்சி

அமெரிக்க தகவல் கூடத்தின் ஏற்பாட்டில் ஆங்கில செறிவூட்டல் 4 மாதகால பயிற்சி எதிர்வரும் 22ஆம் திகதி முதல் யாழ்.பொது நூலகத்தில் கற்பிக்கப்படவுள்ளதாக யாழ் அமெரிக்க தகவல் கூட அலுவலகம் புதன்கிழமை (07) தெரிவித்தது.

ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ள இந்த பயிற்சிநெறியில் உயர்கல்வி கற்போரும் பாடசாலையை விட்டு விலகியவர்களும் இணைந்துகொள்ள முடியும்.

பயிற்சிபெற விரும்புபவர்கள் இல 23 அத்தியடி வீதி நல்லூரில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்துடன் தொடர்புகொண்டு தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.

பதிவு செய்தவர்களுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தில் தேர்வு பரீட்சை நடத்தப்பட்டு, அந்த தேர்வுப் பரீட்சையின் மூலம் பயிற்சி நெறிக்கான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

பயிற்சிநெறி வகுப்புக்கள் வாரத்தின் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 3 மணியிலிருந்து 5 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts