அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா இன்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளரருமான ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக காலமானார். அதனைத்தொடர்ந்து, புதிய தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கூறி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தம்பித்துரை ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.

இச்சூழலில், பொதுச் செயலாளர் பதவியை ஏற்பதற்காக இன்று பகல் 12 மணியளவில் போயஸ் கார்டனிலிருந்து அ.தி.மு.க தலைமையகத்துக்கு புறப்பட்டார் சசிகலா.

பின்னர், அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.கவின் பொது செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா.

Related Posts