அஸ்வின் சுழலில் வீழ்ந்தது மே.இ.தீ.அணி

ஆண்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா, மேற்கிந்திய தீவகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 93 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

CRICKET-IND-WIS

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, முதல் இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. முடிவில் அந்த அணி 243 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்து ஃபாலோ-ஆன் ஆனது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வினின் சுழற்பந்து வீச்சை அனுக முடியாமல் திணறியது. இரண்டாவது இன்னிங்சில் அந்த அணி 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியும், முதல் இன்னிங்சில் 113 ரன்கள் அடித்தும் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆட்டநாயகனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Posts