அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று காலமானார்.
கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்து சுகயீனமுற்று சுயநினைவு அற்றநிலையில் நேற்று மாலை அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.