Ad Widget

அவுஸ்திரேலிய அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் வேலைகள் ஆரம்பம்!

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் அங்க அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களைப் பதியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றும் ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஒப்பந்தமானது ஒரேயொரு தடவை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வொப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இருப்பினும், இவ்வொப்பந்தம் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் கைச்சாத்திடப்பட்டமையினால், அதனை நடைமுறைப்படுத்தும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts