அவுஸ்திரேலியாவுக்கான சகல வீசா கட்டணங்களும் அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவுக்கான வீசாக் கட்டணம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களத்தினால் புதிய வீசா கட்டணம் தொடர்பான பட்டியல் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 2017/18 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்த கட்டண அதிகரிப்புக்கான தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts