அவஸ்தையில் நெளியும் அறிமுக இயக்குநர்

பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் – ‘ரெமோ’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Capture

தன் நண்பர் பெயரில் ’24 AM SUDIOS’ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி ரெமோ படத்தைத் தானே தயாரித்திருப்பதால் சிவகார்த்திகேயன் பதட்டத்திலும் பயத்திலும் இருக்கிறாராம்.

ஒருவேளை… ரெமோ படம் ஓடாமல் போனால் தன்னுடைய கேரியரே கேள்விக்குறியாவது மட்டுமல்ல, அந்தப் படத்தின் தயாரிப்புக்கு வாங்கிய கடனுக்கும் பதில் சொல்ல வேண்டுமே என்று கவலைப்படுகிறாராம். இப்படியொரு பயம் அவருக்கு இருப்பதாலோ என்னவோ… ரெமோ படத்தின் எடிட்டிங், டப்பிங் போன்ற போஸ்ட்புரடக்ஷனிலும் கூடவே இருக்கிறாராம்.

தன்னால் உடன் இருக்க முடியாத நேரங்களில் தன்னுடைய நண்பரும், ரெமோ படத்தின் தயாரிப்பாளருமான ராஜாவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள சொல்கிறாராம். சிவகார்த்திகேயன் அல்லது ராஜா என இரண்டு பேரில் யாராவது ஒருவர் போஸ்ட்புரடக்ஷனில் கூடவே இருப்பதால் புதுமுக இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் சங்கடமாக ஃபீல் பண்ணுகிறாராம்.

இதை தைரியமாக வெளியே சொல்லவும் முடியாமல்…. சொல்லாமல் இருக்கவும் முடியாமல் அவஸ்தையில் நெளிகிறாராம் அறிமுக இயக்குநர். அது மட்டுமல்ல, ரெமோ படம் வெற்றியடைந்தவிட்டால் பிரச்சனையில்லை, ஒருவேளை தப்பாகிவிட்டால் தன்னுடைய தலையை உருட்டிவிடுவார்களே என்று கவலைப்படுகிறாராம். நியாயமான கவலைதானே…

Related Posts