அவர்கள் மின்சார கதிரைக்கு செல்வதில் இருந்து தப்பியது தான் ஜனாதிபதியானதாலே

நாட்டில் முன்னிருந்த அரசியல் தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு செல்வதில் இருந்து விடுபட்டமைக்கு காரணம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனாலேயே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் மின்சாரக் கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அன்றிருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டிருந்த போதும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற முடிந்தது புதிய அரசாங்கம் வந்ததனாலே என்று அவர் கூறினார்.

பொலன்னறுவை, வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தற்போதை நிலையில் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதம் இருப்பதுடன் இந்த நாட்டிற்கு எதிரிப் படை ஒன்றும் இல்லை எனவும் அவர் கூறினார்.

சர்வதேசத்தை வெற்றி பெற்று நாட்டை நாட்டை வெற்றியடையச் செய்யும் வேலைத் திட்டம் ஒன்றில் நுழைந்திருப்பதாக கூறிய ஜனாதிபதி நாட்டினுள் சமநிலை அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விஷேட வேலைத் திட்டங்களை செயற்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறினார்.

Related Posts