இன்று கீரிமலையில் மைத்திரி ”நல்லிணக்கபுரம்” வீடுகள் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்
மாணவர்கள் இழப்பு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை ஏற்றுக்கொள்கின்றேன். தென்னிலங்கையில் இவ்வாறு மாணவர் கொலை செய்யப்பட்டால் இதை விட மோசமாக வெகுண்டெழுந்திருப்பார்கள். அந்தவகையில் பக்குவமாக நடந்து கொண்டதற்காக வடக்கு மக்களுக்கு நன்றி கூறுகின்றேன். பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட்டு நீதிவழங்கப்படும்.
மாவை சொன்னதுபோல மனச்சாட்சியில் ஏற்படுத்திய உடன்படிக்கை மிக மிக மேலானது.
புதிய அரசியல் அமைப்பு குறித்து இறுதிசெய்வதற்கு முன்பதாக சிலர் விகாரைகளுக்கு சென்று பொய் கூறுகின்றனர். (ரணிலை மறைமுகமாக சாடுகிறார்)
எமது நாட்டில் மீண்டும் ஒருமுறை இரத்த ஆறு ஓடுவதற்கு அனுமதிக்க கூடாது. தேர்தலில் மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையினை தவிடுபொடியாக்க நான் ஒருபோதும் விடமாட்டேன்.
ஆயிரமாயிரம் வீடுகளை கட்டித்தருவேன் வீடுகட்டினால் போதாது வாழ்வாதார விடயங்களையும் மேம்படுத்தவேண்டும். அதையும் எமது அரசு செய்யும். வடபகுதி மக்களுக்கு ஒருசெய்தியை சொல்ல விரும்புகின்றேன். அவரசமாக எதற்கும் தீர்வு கண்டுவிடமுடியாது.பொறுமை காக்கவேண்டும். என தெரிவித்தார்.