`அவன் இவன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால், ஆர்யா

விஷால்-கார்த்தி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் `கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. மறைந்த இயக்குநர் சுபாஷ் எழுதியிருந்த கதையை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா இயக்கி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ள இப்படத்தில், கதாநாயகியாக `வனமகன்’ படத்தில் நடித்துள்ள ஷாயிஷா சய்கல் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நடிகர் சங்க கட்டிடத்துக்கு பணம் திரட்டும் விதமாக, இப்படத்தில் இணைந்து நடிக்க விஷால் மற்றும் கார்த்தி ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இப்படத்தின் மூலம் வசூலாகும் பணத்தினை நடிகர் சங்க கட்டிடம் கட்ட பயன்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகரும், விஷாலின் நெருங்கிய நண்பருமான `கடம்பன்’ ஆர்யா இந்த கலகல கூட்டணியில் இணைய இருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஆர்யா – விஷால் இணைந்து `அவன் இவன்’ படத்தில் நடித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் சங்கத் தேர்தலின் போது ஆர்யா, விஷாலின் பாண்டவர் அணி சார்பில் கலந்து கொண்டு, விஷாலுக்கு ஆதரவு திட்டியிருந்தார். இந்நிலையில், அவருடன் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts