மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த கைப்பேசி சார்ஜரின் வயரை தவறுதலாக வாயில் வைத்தமையால், ஏழு மாத பெண் சிசுவின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று நேற்று பிற்பகல் திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில், அச்சிசுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த சிசுவை காப்பற்ற முடியவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.