கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரசன்ன குணசேன மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
இதற்கு மக்கள், தங்களினால் முடிந்த சுயபரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதனூடாக ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுள்ளமையை இனங்கண்டு, சிகிச்சைப் பெறும்போது குணமடைய முடியும்.
அதாவது, சில சொற்களை பேசும் போது சோர்வை உணர்தல், ஒரே மூச்சில் 1- 10 வரை எண்ணுவதற்கு சிரமப்படுதல் ஆகிய தன்மைகளை உணர்வீர்களாயின் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.